×

சுட்டெரிக்கும் வெயில் மத்தூரில் விற்பனைக்கு குவிந்த வெள்ளரி பழங்கள்

போச்சம்பள்ளி, மே 28: கத்திரி வெயில் சுட்டெரிப்பதால், மத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளரி பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை தொடக்கத்தில் இருந்தே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் தர்ப்பூசணி, முலாம்பழம்,  இளநீர், கரும்புசாறு மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் உட்கொள்கின்றனர். மத்தூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளரி  பழங்களை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். இதை தினமும் பறித்து மத்தூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு விற்பனை அனுப்புகின்றனர். ஒரு கிலோ வெள்ளரி பழம் ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழமாக சாப்பிடவும், ஜூஸ் தயாரித்து பயன்படுத்தவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். கத்திரி வெயிலால் வெள்ளரி பழம் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED ஓசூர் வாலிபரிடம் ₹17.98 லட்சம் மோசடி